2வது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு
இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் இந்தியா - இலங்கை இடையே நடைபெறுகின்றன. இதில் முதல் டி20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசாமில் உள்ள கவுகாத்தியில் நடைபெறவிருந்தது. ஆனால் திடீரென அங்கு பெய்த மழையால் போட்டி தடைபட்டது. பின்னர் மழை தொடர்ந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்நிலையில், 2வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் இலங்கை முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சேர்க்கப்பட்ட ஷிகர் தவான் மற்றும் பும்ரா ஆகியோர் முதல் போட்டி ரத்தானதால் விளையாட முடியாமல் போன நிலையில், இன்று நடைபெறும் போட்டியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.