விளையாட்டு
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சு
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சு
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மசாலவில் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவதீப் செய்னி உள்ளிட்ட இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.