\
U19 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா Vs பாகிஸ்தான்: வானிலை நிலவரம் எப்படி?

U19 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா Vs பாகிஸ்தான்: வானிலை நிலவரம் எப்படி?

U19 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா Vs பாகிஸ்தான்: வானிலை நிலவரம் எப்படி?
Published on

U19 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில், அங்கு பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. கால் இறுதியில் ஆப்கானிஸ்தானை வென்று பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய அணியில் யஷஸ்வி, அதர்வா அங்கோலேகர், ரவி பிஷ்னோய், கார்த்திக் தியாகி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தொடரில் இரு அணிகளுமே இதுவரை தோல்விகளை சந்திக்கவில்லை. இன்றைய போட்டியிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.

இந்நிலையில் அங்கு பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மழைக்கு 50% வாய்ப்புகள் உள்ளதாகவும் போட்டியின்போது வெப்பநிலை 20 டிகிர் செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com