2-வது டெஸ்ட் ; நியூசிலாந்து வெற்றி - மீண்டும் ஒயிட்வாஷ் ஆன இந்தியா..!

2-வது டெஸ்ட் ; நியூசிலாந்து வெற்றி - மீண்டும் ஒயிட்வாஷ் ஆன இந்தியா..!
2-வது டெஸ்ட் ; நியூசிலாந்து வெற்றி - மீண்டும் ஒயிட்வாஷ் ஆன இந்தியா..!

இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 242 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியாவில் பிருத்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அரை சதம் அடித்தனர். நியூசிலாந்து அணியில் ஜெமிசன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 124 ரன்களில் சுருண்டனர். ஒருவர் கூட 30 ரன்களை எட்டவில்லை. நியூசிலாந்து அணியில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், டிம் சவுதி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 132 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் தொடக்க வீரர்களான டாம் லாதம், டாம் பிலண்டெல் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இந்திய அணியில் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக கெய்ல் ஜெமிசன் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக ஒருநாள் தொடரில் இந்திய அணியை 3-0 என நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்திருந்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடரிலும் 2-0 என ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com