நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா?

நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா?
நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா?

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்பில், இந்திய அணி இன்று 2-வது போட்டியில் களம் காண உள்ளது.

மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக இந்தியாவில், நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், ஹைதராபாத்தில் கடந்த 18-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை இன்று நடைபெறும் ஆட்டம் வாழ்வா - சாவா போட்டி என்றுக்கூட கூறலாம். ஏனெனில், இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால், ஒருநாள் தொடரை இழக்கும் வாய்ப்பு ஏற்படும். இதனால் இன்றையப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில் நடுவரிசை வீரர்களும் ரன்கள் எதுவும் பெரிதாக எடுக்காமல் சோதித்தனர். விராட் கோலி (8), இஷான் கிஷன் (5) போன்ற நட்சத்திர வீரர்கள் கூட பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் மட்டுமே 208 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதேபோல் இரண்டாவது இன்னிங்சில் கடைசியில் இறங்கினாலும், நியூசிலாந்து அணி வீரர்கள் மைக்கேல் பிரேஸ்வெல் 140 ரன்கள் மற்றும் மிட்செல் சான்ட்னெர் 57 ரன்கள் எடுத்து இந்தியா அணி பவுலர்களை மிரட்டினர். இதனால் முதல் போட்டியில் 350 ரன்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றதால், பந்துவீச்சில் மாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு. ராய்ப்பூர் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இரு அணி வீரர்களின் விவரம்:

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷபாஸ் அகமது, முகமது சிராஜ், முகமது ஷமி, உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரீகர் பரத், ராஜத் படிதர்.


நியூசிலாந்து:

டாம் லாதம் (கேப்டன்), பின் ஆலன், பிலிப்ஸ், ஹென்றி நிக்கோலஸ், கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மேன், டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டபி, பெர்குசன், மிச்சேல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லே, இஷ் சோதி, பிளேர் டிக்னர், டரியல் மிட்செல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com