'உங்கள விட high தான்!' - இங்கிலாந்தைக் கலாய்த்த வாசிம் ஜாஃபர்

'உங்கள விட high தான்!' - இங்கிலாந்தைக் கலாய்த்த வாசிம் ஜாஃபர்
'உங்கள விட high தான்!' - இங்கிலாந்தைக் கலாய்த்த வாசிம் ஜாஃபர்

2005 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றதை மதுபோதையுடன் கொண்டாடிய அந்த அணியின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் மற்றும் கெவின் பீட்டர்சனின் புகைப்படத்தை பகிர்ந்து கலாய்த்துள்ளார் வாசிம் ஜாபர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா சதத்தின் துணையுடன் 416 ரன்களை குவித்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி இந்தியாவை விட 332 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர், இங்கிலாந்து அணியை கலாய்த்து பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றதை மதுபோதையுடன் கொண்டாடிய அந்த அணியின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் மற்றும் கெவின் பீட்டர்சனின் புகைப்படத்தை பகிர்ந்து,  'உங்கள விட high தான்' என கலாய்த்துள்ளார்.

இதையுய்ம் படிக்கலாம்: கேப்டன்' பும்ராவின் அசத்தல் பந்துவீச்சு - இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com