ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: மீண்டும் அணிக்கு திரும்பும் முகமது ஷமி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: மீண்டும் அணிக்கு திரும்பும் முகமது ஷமி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்:  மீண்டும் அணிக்கு திரும்பும் முகமது ஷமி

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி களமிறங்க உள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டி கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரில் தற்போது வரை நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. முதல் இரு டெஸ்டில் இந்தியா வென்றது. இந்துாரில் நடந்த மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. 

இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி  அகமதாபாத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல் இரு டெஸ்டில் விளையாடிய ஷமிக்கு, அவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில் மூன்றாவது டெஸ்டில் ஓய்வு தரப்பட்டு, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில் தற்போது கடைசி போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதால் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் மீண்டும் முகமது ஷமி அணிக்குள் வருவார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக சிராஜுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தூர் ஆடுகளம் சர்ச்சையில் சிக்கியதால் அகமதாபாத் ஆடுகளத்தை எந்த மாதிரி தயாரிக்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் வழக்கம் போல ஆடுகளம் தயார் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com