\
3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 294 ரன்கள் இலக்கு

3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 294 ரன்கள் இலக்கு

3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 294 ரன்கள் இலக்கு
Published on

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலக்காக 294 ரன்களை ஆஸ்திரேலியா குவித்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வார்னரும், ஆரோன் பிஞ்ச்சும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை உயர்த்தினர். ஒரு கட்டத்தில் வார்னர் விக்கெட்டை பறிகொடுக்க, பிஞ்ச் தொடர்ந்து விளையாடி சதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் ஸ்மித்தும் நிதானமாக விளையாடி அரை சதத்தை எட்டினார். 

பின்னர் வந்த ஆட்டக்காரர்கள் இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாக, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்தது. இதனால் 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடவுள்ளது. இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com