
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இந்தியா விளையாடும் கிரிக்கெட் தொடர்களின் போட்டிகளுக்கான தேதிகளை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.
இலங்கையுடன் பெற்ற சாதனை வெற்றிகளை தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இந்திய கிரிக்கெட் அணி மோதுகிறது. இதற்காக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்தியாவிற்கு வருகை தருகின்றன. ஆஸ்திரேலியாவுடன் 5 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும், நியூலாந்துடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும் இந்தியா விளையாடவுள்ளது.
முற்றிலும் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த தொடரின் போட்டிகளுக்கான தேதிகளை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. இந்தியாவுடனான ஆஸ்திரேலியாவின் போட்டிகளானது செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13 ஆம் தேதியும், நியூசிலாந்து இடையேயான போட்டிகள் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதியும் நிறைவடைகின்றன. கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறவுள்ளதால், இதற்கான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலியா உடனான போட்டிகள்
பயிற்சி ஆட்டம் - 12 செப். - சென்னை
முதல் ஆட்டம் (50.ஓ) - 17 செப். - சென்னை
2வது ஆட்டம் (50.ஓ) - 21 செப். - கொல்கத்தா
3வது ஆட்டம் (50.ஓ) - 24 செப். - இந்தூர்
4வது ஆட்டம் (50.ஓ) - 28 செப். - பெங்களூரு
5 வது ஆட்டம் (50.ஓ) - 1 அக். - நாக்பூர்
1வது ஆட்டம் (டி20) - 7 அக். - ராஞ்சி
2வது ஆட்டம் (டி20) - 10 அக். - கவுகாத்தி
3வது ஆட்டம் (டி20) - ஹைதராபாத்
நியூசிலாந்துடனான போட்டிகள்
1வது பயிற்சி ஆட்டம் - 17 அக். - மும்பை
2வது பயிற்சி ஆட்டம் - 19 அக். - மும்பை
1வது ஆட்டம் (50.ஓ) - 22 அக். - மும்பை
2வது ஆட்டம் (50.ஓ) - 25 அக். - புனே
3வது ஆட்டம் (50.ஓ) - 29 அக். - உ.பி
1வது ஆட்டம் (டி20) - 1 நவ. - டெல்லி
2வது ஆட்டம் (டி20) - 4 நவ. - ராஜ்கோட்
3வது ஆட்டம் (டி20) - 7 நவ. - திருவனந்தபுரம்