\
2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்!

2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்!

2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்!
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி அபார சதம் அடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் 50, ஹாரிஸ் 70, டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் எடுத்தனர்.


இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்திருந்தது. விராத் கோலி 82 ரன்னுடனும் ரஹானே 51 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.


மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நாதன் லைன் பந்துவீச்சில் ரஹானே ஆட்ட மிழந் தார். அவர் 51 ரன் எடுத்திருந்தார்.

அடுத்து ஹனுமா விஹாரி, விராத் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ஆடினார்.  நிலையான ஆட்டத்தை வெளிப்படுத் திய விராத் கோலி அபார சதமடித்தார். இது அவரது 25 வது டெஸ்ட் சதம் ஆகும்.

வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் கூட கோலி விரைவாகவே ஆடி, ரன் குவிப்பது வழக்கம். இந்த போட்டியில் அவர் சதமடிக்க 218 பந்துகளை எதிர்கொண்டார். சதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், ‘என் பேட் பேசும்’ என்று பொருள்படும்படி சைகை செய்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com