\
2வது டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி

2வது டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி

2வது டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி
Published on

இந்தியாவிற்கு எதிரான 2வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதனால் இந்திய அணி 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 119 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து விளையாடி வெற்றிக்கு வழி வகுத்தனர். இதனால் 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 1-1 என்ற விகிதத்தில் தொடர் சமநிலையில் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com