விளையாட்டு
ஆஸிக்கு எதிரான தோல்வி: முதலிடத்தை பறிகொடுத்தது இந்தியா
ஆஸிக்கு எதிரான தோல்வி: முதலிடத்தை பறிகொடுத்தது இந்தியா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்ததால் ஐசிசியின் தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொணட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, பெங்களூரில் நேற்று நடந்த போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் ஐசிசியின் ஒரு நாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியா, புள்ளிகள் குறைந்தால் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. தென்னாப்பிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது.