விளையாட்டு
அதிரடி காட்டிய பட்லர்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து
அதிரடி காட்டிய பட்லர்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து
இருவது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில், பட்லரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி அரையிறுத்திக்கு செல்லும் வாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்தது.
ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 35 ரன்களுக்கு ஜோசன் ராய், மலான், பேர்ஸ்டோ ஆகிய முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் பத்து ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே இங்கிலாந்து எடுத்திருந்தது. அதன்பின்னர் பட்லர்- கேப்டன் மோர்கன் கூட்டணி ரன் விகிதத்தை அதிகரித்தது. குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இலங்கை வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்து இருவது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. இதனால் 19 ஆவரில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இலங்கை பறிகொடுத்து தோல்வியடைந்தது. ஆல்ரவுண்டர் ஹசரங்கா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட இங்கிலாந்து அணி உறுதி செய்தது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது.