\
இந்தோனேசியா
இந்தோனேசியாமுகநூல்

கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் வீரர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழந்தார்.
Published on: 

இந்தோனேசியாவில் பன்டங் பகுதியில் உள்ள மைதானத்தில் உள்ளூர் கால்பந்து தொடர் நடைபெற்றது. பன்டங் மற்றும் சுபங் அணிகள் இடையேயான போட்டியின் போது சுபங் அணியை சேர்ந்த செப்டைன் ரஹர்ஜாவை மின்னல் தாக்கியது.

இதில் நிலைகுலைந்த அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தோனேசியாவில் மின்னல் தாக்கி கடந்த ஓராண்டில் உயிரிழக்கும் 2 ஆவது விளையாட்டு வீரர் செப்டைன் ரஹர்ஜா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா
INDvENG | மூன்றாவது டெஸ்ட்: மூன்று மாற்றங்களுடன் களமிறங்குமா இந்தியா..?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com