“நாங்களும் மிஸ் பண்றோம்” ரசிகர்களுக்கு சைகையால் பதிலளித்த விராட் கோலி

“நாங்களும் மிஸ் பண்றோம்” ரசிகர்களுக்கு சைகையால் பதிலளித்த விராட் கோலி

“நாங்களும் மிஸ் பண்றோம்” ரசிகர்களுக்கு சைகையால் பதிலளித்த விராட் கோலி

‘வி மிஸ் யூ தோனி’ என்று மைதானத்தில் பேனர் வைத்திருந்த ரசிகர்களை நோக்கி தாங்களும் தான் தோனியை மிஸ் பண்றோம் என்பதுபோல் சைகை காட்டினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 195 ரன்கள் என்ற இலக்கை விரட்டி இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ரசிகர்கள் பலரும் தோனி டி-சார்ட்டுகள் அணிந்தும், தோனி குறித்த பதாகைகளை ஏந்தியவாரும் இருந்தனர். அதில் ரசிகர்கள் சிலர் ‘வி மிஸ் யூ தோனி’ என்ற பிளேகார்டை வைத்திருந்தனர். இதனை மைதானத்தில் பீல்டிங் செய்தபடியே கவனித்த கேப்டன் விராட் கோலி, நாங்களும் தோனியை மிஸ் பண்றோம் என்ற வகையில் தனது விரால்களால் ‘வி’ என்பது போல் சைகை காட்டினார்.

இதனையடுத்து ரசிகர்கள் தோனி பதாகை வைத்திருந்ததும், விராட் கோலி அதற்கு விரும்பப்பட்டு தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தியதும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. ஏற்கனவே, ஆஸ்திரேலிய கேப்டன் வாடே விக்கெட் கீப்பிங் செய்த போது தவானை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பை தவறவிட்ட போது, ‘தோனியை போல் ஸ்பீடாக இல்லை’ என்று கூறியது ட்ரோல் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"> <a href="https://t.co/rx9QyhttB2">pic.twitter.com/rx9QyhttB2</a></p>&mdash; Gani pk (@Gani05071717) <a href="https://twitter.com/Gani05071717/status/1335921032075436032?ref_src=twsrc%5Etfw">December 7, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின்னும் விராட் கோலி தலைமையின் கீழ் விளையாடினர். அந்த காலங்களில் தோனி சொல்லும் ஐடியாக்களை அப்படியே களத்தில் செயல்படுத்தினார் விராட் கோலி. இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது களத்தில் நன்றாக தெரிந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com