விளையாட்டு
இது அன்பால் சேர்ந்தக் கூட்டம்; அழிக்க முடியாது: இம்ரான் எச்சரிக்கை
இது அன்பால் சேர்ந்தக் கூட்டம்; அழிக்க முடியாது: இம்ரான் எச்சரிக்கை
இது அன்பால் சேர்ந்த கூட்டம் அழிக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இம்ரான் தாஹிர் தனது ட்விட்டரில், “சென்னையில் இன்று இரவு நடைபெறவுள்ள முதல் போட்டியை நினைக்கும் போது உற்சாகமாக உள்ளது. சென்னை அணி ரசிகர்கள் நிச்சயம் எங்களுக்கு அவர்களது ஆதரவால் உற்சாகமூட்டுவார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இது அன்பால் சேர்ந்தக் கூட்டம். அழிக்க முடியாது. எடுடா வண்டிய.. போடுடா விசில்” என தங்கிலீஷில் கூறியுள்ளார்.
இது அன்பால் சேர்ந்தக் கூட்டம், இதனை அழிக்க முடியாது என இம்ரான் கூறியுள்ளது ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களையே குறிக்கிறது. ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இவ்வாறு அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.