உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வு: இம்ரான் தாஹிர் முடிவு!
தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 39 வயதாகும் இவர் 2011 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டி யில் அறிமுகமானார். இதுவரை 95 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தாஹிர், 156 விக்கெட்டுகளும் 20 டெஸ்ட் போட்டிகளில் 37 இன் னிங்ஸில் பங்கேற்று 57 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் தாஹிர், நேற்று முன் தினம் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து அவர் பேசும்போது, உலகக் கோப்பைக்குப் பின் ஒரு நாள் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள இருப்ப தாகத் தெரிவித்துள்ளார். ஆனால், 2020 ஆம் ஆண்டு வரை டி20 தொடரில் பங்கேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் இவர்.