தோனியின் படைத்தளபதி... சிஎஸ்கேவுக்கு ஜடேஜா ஏன் அதிக அவசியம்?

தோனியின் படைத்தளபதி... சிஎஸ்கேவுக்கு ஜடேஜா ஏன் அதிக அவசியம்?
தோனியின் படைத்தளபதி... சிஎஸ்கேவுக்கு ஜடேஜா ஏன் அதிக அவசியம்?

நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற ராஜஸ்தானுடனான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்நிலையில் சென்னை அணியில் ஜடேஜா, ஏன் அவசியம் ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும்?

இடது கை பேட்ஸ்மேனான ஜடேஜா கடைசி ஓவர்களில் எதிரணியினரின் பந்துவீச்சை அசால்ட்டாக சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடிக்கின்ற வல்லமை படைத்தவர். 

சென்னை அணியின் செல்லப்பிள்ளையான ஜடேஜா  இதுவரை சென்னைக்காக ஆறு சீசன்களில் விளையாடியுள்ளார். 

பேட்டிங், பவுலிங் மட்டுமல்லாது ஃபீல்டிங்கிலும் அபாரமாக செயல்படக் கூடியவர். 

பவுண்டரி லைனில் பந்தை தடுப்பதிலும், கேட்ச்களை பிடிப்பதிலும் ஜடேஜாவுக்கு நிகர் ஜடேஜா தான். 

ரெய்னா இந்த சீசனில் சென்னைக்காக ஆடாத நிலையில் தோனி படையின் படைத் தளபதியாக ஜடேஜா இயங்கி வருகிறார். அணியில் அவரது இருப்பு தோனிக்கு பக்கபலம். 

நடப்பு சீசனில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 39.75. 

சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மிகமுக்கியமானவராக ஜடேஜா உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com