2-வது டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்!

2-வது டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்!

2-வது டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்!
Published on

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 294-வது டெஸ்ட் வீரராக அவர் களமிறங்கியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில், காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காத கேப்டன் ஜேசன் ஹோல்டர் அணிக்குத் திரும்பியுள்ளார்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி பிராத்வெயிட்டும் பாவெல்லும் களமிறங் கினர். 11.1 வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில்  ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், 22 ரன்கள் எடுத்திருந்த பாவெல். அடுத்து சாய் ஹோப், பிராத்வெயிட்டுடன் இணைந்தார். 14 ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்தில் எல்பிட பிள்யூ ஆனார் பிராத்வெயிட்.

இதையடுத்து ஹெட்மையர், ஹோப்புடன் சேர்ந்தார். இவர்கள் இருவரும் பொறுமையாக ஆடினார். நன்றாக ஆடிக்கொண்டி ருந்த ஹோப் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளை வரை அந்த அணி 31.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. 10 ரன்கள் எடுத்த நிலையில் ஹெட்மையர் களத்தில் உள்ளார்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின், குல்தீப், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com