பாக். அணியில் இன்ஜமாம் மருமகன்!

பாக். அணியில் இன்ஜமாம் மருமகன்!

பாக். அணியில் இன்ஜமாம் மருமகன்!
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில், அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல் ஹக்-கின் மருமகன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியுடன் பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி துபாயில் இப்போது நடந்து வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் 13-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் விளையாடும் பாகிஸ்தான் அணி, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அசார் அலி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, இளம் வீரர் இமாம் உல்-ஹக் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர், முன்னாள் கேப்டனும் பாகிஸ்தானின் தேர்வு குழு தலைவருமான, இன்ஜமாம் உல்-ஹக்கின் சகோதரி மகன். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் இமாமுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இன்ஜமாம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com