இப்படியா கலாய்ப்பீங்க: வெளியேறினார் பாக்.கிரிக்கெட் வீரர்
இப்படியா கலாய்ப்பீங்க: வெளியேறினார் பாக்.கிரிக்கெட் வீரர்
தனது ஹேர் ஸ்டைலை அதிகமாக விமர்சித்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் டிவிட்டரில் இருந்து வெளியேறினார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் இமாத் வாசிமை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கலாய்த்து எடுத்துவிட்டனர். அவரது ஹேர் ஸ்டலை கிண்டலடித்து அவர்கள் செய்த டிவிட்டால், இமாத் வாசிம் அப்செட்டானார்.
சல்மான் கான் நடித்து 2003-ல் வெளியான ’தேரே நாம்’ படத்தில் அவரது ஹேர் ஸ்டைலையும் ’குச் குச் ஹோதா ஹை’ படத்தில் கஜோலின் ஹேர் ஸ்டைலையும் ஒப்பிட்டு கமென்ட் அடித்திருந்தனர். ’இன்னைக்கு விக்கெட் எடுக்கலைன்னா ’தேரே நாம் 2’ வில் இவர் தான் ஹீரோ’ என சில ரசிகர்களும் இன்னும் சிலர், ’இவரோட ஹேர் ஸ்டைலை பார்த்துதான் மழை பெய்ய ஆரம்பிச்சுது’ என்றும் கலாய்த்திருந்தனர். இதனால் கடுப்பான இமாத் வாசிம் டிவிட்டரில் இருந்து வெளியானார்.