\
இளவேனிலுக்கு சிறந்த வீராங்கனைக்கான விருது

இளவேனிலுக்கு சிறந்த வீராங்கனைக்கான விருது

இளவேனிலுக்கு சிறந்த வீராங்கனைக்கான விருது
Published on

துப்பாக்கிச் சுடுதலில் நடப்பாண்டின் சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் டார்கெட் ‌விருதை தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் பெற்றுள்ளார்.

முனிச்சில் நடைபெற்ற விழாவில், பெருமைமிக்க இவ்விருதை அவர் பெற்றுக் கொண்டார். 10 மீட்டர் ஏர் ரைபிள்‌ பிரிவு தரநிலையில் முதலிடம் பிடித்ததால், சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் இவ்விருது அவரு‌க்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் சவுரப் சவுத்ரி, திவ்யான் சிங் ஆகியோரும் தங்களது பிரிவு தரநிலையில்‌ முதலிடம் பிடித்ததால், கோல்டன் டார்கெட் விருதை வென்றனர்.

அண்மையில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி சீனாவில் நடந்தது. இதில் இந்தியா சார்பில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். இதன் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் அவர், 250.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை அவர் வசப்படுத்தினார். 

ஏற்கெனவே இவர், பிரேசிலில் நடந்த சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல், உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com