3 நாடுகள் டி20 போட்டி: கோலிக்கு ரெஸ்ட்?

3 நாடுகள் டி20 போட்டி: கோலிக்கு ரெஸ்ட்?

3 நாடுகள் டி20 போட்டி: கோலிக்கு ரெஸ்ட்?
Published on

மூன்று நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடக்கிறது. முதல் போட்டி மார்ச் 6-ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8 ஆம் தேதி இந்தியா- பங்களாதேஷ் அணிகளும் 10 ஆம் தேதி இலங்கை- பங்களாதேஷ், 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-பங்களாதேஷ், 16 ஆம் தேதி இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.

இந்தத் தொடரில், தென்னாப்பிரிக்கத் தொடரில் தொடர்ந்து பங்கேற்ற, இந்திய அணி கேப்டன் விராத் கோலி, வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. 

இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘விராத் கோலிக்கு நாங்களாக ஓய்வு கொடுக்க மாட்டோம். அவர் தேவை என்று விரும்பினால் கொடுப்போம்’ என்றனர். பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்குப் பதிலாக தாகூர், ஜெயதேவ் உனட்கட் மற்றும் பசில் தம்பி அணியில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com