"டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் லாஜிக் இல்லை" விராட் கோலி காட்டம்

"டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் லாஜிக் இல்லை" விராட் கோலி காட்டம்
"டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் லாஜிக் இல்லை" விராட் கோலி காட்டம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் லாஜிக் இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தி வருகிறது. 2019 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த லீக்கில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 9 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஆறு அணிகளோடு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும்.

அதில் மூன்று தொடர் சொந்த மண்ணிலும், மூன்று தொடர் அயல்நாடுகளிலும் விளையாட வேண்டும் என்பது நிபந்தனை. அந்த தொடர்கள் இரண்டு முதல் ஐந்து போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர்களாக இருக்க வேண்டும். அதில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணி வரும் ஜூன் 2021இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் என அறிவித்தது ஐசிசி.

அதில் நியூசிலாந்து அணி 70 சதவிகிதத்துடன் 420 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டியில் விளையாடுவதையும் அந்த அணி உறுதி செய்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக இப்போது இறுதி போட்டியில் விளையாடப் போவது யார் என்பதற்கு தான் இப்போது போட்டா போட்டி நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதி விளையாடும் 4 போட்டிகள் கொண்ட நடப்பு டெஸ்ட் தொடர் தான் இறுதி போட்டியில் விளையாடப் போகும் மற்றொரு அணி எது என்பதை உறுதி செய்யும்.

இப்போது இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள கோலி "சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் வழங்கும் முறை பொது முடக்க காலத்தில் மாற்றப்பட்டது. திடீரென மாற்றம் செய்ததால் எதுவும் இப்போது உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. புள்ளிகள் பட்டியல் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அதில் எந்த லாஜிக்கும் இல்லை" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com