“மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடி இருக்கலாம்” - ராஜிவ் சுக்லாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

“மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடி இருக்கலாம்” - ராஜிவ் சுக்லாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

“மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடி இருக்கலாம்” - ராஜிவ் சுக்லாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது  இன்னிங்க்ஸை 131 ஓவர்கள் விளையாடி டிரா செய்துள்ளது. அணியின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா வெற்றிக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

“இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருந்தால் நாம் சிட்னி டெஸ்ட் போட்டியை வென்றிருக்கலாம்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அவர். 

அவரது கருத்தை பலரும் இப்போது TROLL செய்து வருகின்றனர். “நீங்கள் வந்து இந்தியாவுக்காக விளையாடுங்கள்”, “அறவே  யோசிக்காமல் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து”, “அடுத்த போட்டியில் நீங்கள் தான் இந்தியாவின் ஓப்பனர்”, “ஒருமுறை கூட நீங்கள் கிரிக்கெட் விளையாடியது இல்லை என்பது தெரிகிறது” என ரகம் ரகமாக கிரிக்கெட் ரசிகர்கள் ராஜீவ் சுக்லாவை தெறிக்கவிட்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com