"சச்சினின் 100 சத சாதனையை இவர் முறியடிப்பார்" இர்பான் பதான் கைகாட்டும் வீரர் யார் ?
சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் அடித்த சாதனையை முறியடிக்க யாருக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் "கிரிக்கெட் கணெக்டெட்" நிகழ்ச்சியில் பேசிய இர்பான் பதான் "விராட் கோலி நிச்சயம் 100 சதம் சாதனை குறித்து யோசித்து இருப்பார். ஆனால் அவர் அது குறித்து வெளியே பேசுவதில்லை. ஆனால் சச்சினின் சாதனையை யாரால் முறியடிக்க முடியும் என்று கேட்டால் நிச்சயம் கோலியால் முடியும் என சொல்வேன்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் "சச்சின் நூறாவது சதத்தை அடிக்கும்போது நான் அந்தப் பயணத்தில் இருந்தேன். எனினும் அவரின் அந்தச் சாதனையை ஒரு இந்தியர்தான் முறியடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்றார் இர்பான் பதான். விராட் கோலி இப்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் என மொத்தம் 70 சதங்களை விளாசியுள்ளார். இதில் ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களையும் அடித்துள்ளார் கோலி.

