‘ஷாகின் ஷா கலந்திருந்தால் ரூ.200கோடிக்கு ஏலம் போயிருப்பார்’ - சூடானது ட்விட்டர் களம்!

‘ஷாகின் ஷா கலந்திருந்தால் ரூ.200கோடிக்கு ஏலம் போயிருப்பார்’ - சூடானது ட்விட்டர் களம்!

‘ஷாகின் ஷா கலந்திருந்தால் ரூ.200கோடிக்கு ஏலம் போயிருப்பார்’ - சூடானது ட்விட்டர் களம்!
Published on

நடந்துமுடிந்த 15-வது ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில், பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி மட்டும் கலந்துகொண்டிருந்தால், ரூ. 200 கோடி விலைக்கு போயிருப்பார் என்று பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் ட்வீட் செய்ததை அடுத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி, கடந்த ஆண்டில் 36 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தி சராசரி 22.20 வைத்துள்ளார். சிறந்த பந்துவீச்சு மூலம் 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகளவில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கடந்த ஆண்டில் அப்ரிடி வீசிய பந்து வீச்சு, பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்துள்ளது.

குறிப்பாக டெஸ்ட் போட்டிகள், டி20 உலகக் கோப்பையில் அப்ரிடியின் பந்துவீச்சு அருமையாக இருந்தது. மேலும், ஐசிசி-யின் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற முதல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் என்றால் அது ஷாகின் ஷா அப்ரிடி தான். இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 31 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதிலும் இந்திய பேட்டிங் வரிசையில் முதல் மூன்று வீரர்களான ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை இவர் வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நடந்துமுடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், ஷாகின் ஷா அப்ரிடி மட்டும் கலந்துகொண்டிருந்தால், ரூ. 200 கோடி விலைக்கு போயிருப்பார் என்று பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், அந்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை ட்ரோல் செய்து வருகின்றனர். என்னதான் உலக அளவில் இளம் வேகப்பந்துவீச்சாளராக அறியப்பட்டாலும், அதற்காக இப்படியா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 15-வது ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில், மொத்தம் 10 அணிகள் கலந்துகொண்டு 204 வீரர்களை தேர்ந்தெடுக்க ரூ. 552 கோடி செலவிட்டுள்ளன. அதிகப்பட்சமாக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான இஷான் கிஷன் ரூ. 15.25 கோடிக்கு மும்பை அணியால் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com