உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி: நாளை தொடங்குகிறது!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி: நாளை தொடங்குகிறது!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி: நாளை தொடங்குகிறது!
Published on

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. வழக்கமாக 14 அணிகள் போட்டியிடும். இது 10 அணிகளாக குறைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை வகித்த தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

இந்த தகுதி சுற்றுப் போட்டி நாளை தொடங்கி 25 ஆம் தேதி வரை ஜிம்பாப்வேயில் நடக்கிறது. இதில் 10 அணிகள் இரு பிரிவுகளில் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு அமீரகம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் தகுதி பெறும் இரண்டு அணிகள், உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

இரண்டு முறை உலக கோப்பையை வென்ற அணியான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த லிஸ்டில் இருப்பதுதான் வருத்தமான விஷயம்!

இந்தப் போட்டிகளும் முதன் முறையாக டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுகிறது. 


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com