தோனியை 7வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு? - ரவிசாஸ்திரி விளக்கம்

தோனியை 7வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு? - ரவிசாஸ்திரி விளக்கம்
தோனியை 7வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு? - ரவிசாஸ்திரி விளக்கம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனியை 7ஆவது வீரராக களமிறக்கியது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். 

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியை இந்தியா 239 ரன்களில் கட்டுப்படுத்தியது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 5 ரன்னிற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 

வழக்கமாக தோனிதான் 5 ஆவது வீரராக களமிறங்குவார். ஆனால், அன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் 5வது வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால், அவரும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 10 ஓவர்களில் இந்திய அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. ஆறாவது வீரராகவும் தோனி இறங்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா 6 ஆவது வீரராக களமிறங்கினார். நான்காவது வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா தலா 32 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் பொறுப்பற்ற ஷாட்களை அடித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர், 7 ஆவது வீரராக தோனி களமிறங்கினார். தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து 8 ஆவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்தனர். ஆனால், இறுதியில் தோனி ரன் அவுட் ஆனதை அடுத்து இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அதனையடுத்து, தோனி 7 ஆவது வீரராக களமிறக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தது. முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி, கவாஸ்கர் உள்ளிட்ட வீரர்கள் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு பின் களமிறக்கப்பட்டது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

இந்நிலையில், தோனி 7 ஆவது வீரராக களமிறக்கப்பட்டது குறித்து ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். , “அது முற்றிலும் அணியாக எடுத்த முடிவு. அதில் எல்லோருடைய பங்கும் உண்டு. அது ஒரு எளிமையான முடிவுதான். தோனி தொடக்கத்திலே களமிறங்கி ஆட்டமிழக்க வேண்டும் என விரும்புவீர்களா? அது ஒட்டுமொத்த வெற்றியை நோக்கிய பயணத்தை தடுத்துவிடும். 

அனுபவம் வாய்ந்த ஆட்டம் கடைசியில் தேவைப்பட்டது. அவர் எல்லா காலங்களிலும் சிறந்த பினிஷராக இருந்துள்ளார். தோனியை கடைசி கட்டத்தில் பயன்படுத்தாமல் இருப்பதுதான் தவறு. அதில் ஒட்டுமொத்த அணியும் தெளிவாக இருந்தது.

உங்களின் தலையை நிமிர்ந்தி கொண்டு நடந்து வாருங்கள் வீரர்களே. அந்த 30 நிமிட கோசமான விளையாட்டிற்காக கடந்த சில வருடங்களாக நாம் ஒரு சிறந்த அணியாக விளையாடவில்லை என்று ஆகிவிடாது. ஒரேயொரு போட்டி, ஒரு தொடர் மட்டுமே ஒரு அணியின் திறனை தீர்மானித்துவிடாது. நீங்கள் ஏற்கனவே நிறைய மரியாதையை சம்பாதித்துவிட்டீர்கள்” என இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com