இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் மோதல்

இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் மோதல்

இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் மோதல்
Published on

உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று லண்டனில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 10 அணிகள் கொண்ட தொடரில் 2 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலில் இடத்தில் உள்ளது. தோல்வியின் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி -2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

இதைத்தொடர்ந்து இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்தில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்த பயிற்சிப் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியுள்ளது. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் தோற்றுள்ளது. ஆனால் பயிற்சிப் போட்டிகளை கொண்டு உலகக் கோப்பை போட்டிகளை கணிக்க இயலாது என்பதால், இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் எனப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com