கடைசி நேரத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்துவார்களா இந்திய மகளிர்?

கடைசி நேரத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்துவார்களா இந்திய மகளிர்?

கடைசி நேரத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்துவார்களா இந்திய மகளிர்?

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது.

பெண்கள் உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை, இந்தியா எதிர்கொள்கிறது.

மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது 4 ஆட்டங்களிலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.  இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஆஸ்திரேலியா முதல் அணியாக அரை இறுதியை உறுதி செய்து விடும். மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில், தலா 2 வெற்றி, தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பை குறித்து இந்தியா சிந்திக்க முடியும். இதனால் அந்த ஆட்டம் வாழ்வா சாவா என அமைந்துள்ளது. அதுதவிர மேலும் 2 லீக் ஆட்டங்கள் இந்தியாவுக்கு உள்ளன.

இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. யாஸ்திகா பாட்டியா 59 ரன்களும், மிதாலி ராஜ் 68 ரன்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 57 ரன்களும் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து  278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கவுள்ளது.

இதையும் படிக்க: ஐபிஎல் 2022: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ஸ்ட்ரைக் - ரொட்டேஷன்' விதி என்ன சொல்கிறது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com