மகளிர் கிரிக்கெட்: இந்தியா-பாக் போட்டியில் தொடருது பெருமை!
மகளிர் ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 38.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில், ஏக்தா பிஸ்ட் 10 ஓவர்களில் 2 மெய்டனுடன் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.
மகளிர் ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.
5 விக்கெட் எடுத்தது பற்றி ஏக்தா பிஸ்ட் கூறும்போது, ’ புதிய பந்தில் பவுலிங் செய்வது எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை. பிட்ச் எப்படியிருந்தாலும் என் நோக்கம் அதிக டாட் பால்கள் போடுவது விக்கெட் எடுப்பது மட்டுமே. அதை சரியாக செய்தேன். இதை அடுத்த போட்டிகளிலும் தொடர்வேன்’ என்றார்.