இங்கிலாந்து 1000: வரலாற்று சிறப்பு டெஸ்ட், வாழ்த்தும் ஐசிசி!

இங்கிலாந்து 1000: வரலாற்று சிறப்பு டெஸ்ட், வாழ்த்தும் ஐசிசி!
இங்கிலாந்து 1000: வரலாற்று சிறப்பு டெஸ்ட், வாழ்த்தும் ஐசிசி!

ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி புதிய சாதனையை படைக்க இருக்கிறது. ஆயிரம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற மைல்கல்லை அந்த அணி எட்டப்போகிறது. இந்தியாவுக்கு எதிராக நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இந்த மைல் கல்லை எட்டுகிறது அந்த அணி. 

இங்கிலாந்து, தனது முதல் டெஸ்ட் போட்டியை 1877 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகத் தொடங்கியது. இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  357 வெற்றிகளையும் 297 தோல்விகளையும் கண்டுள்ளது. 345 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது. 

ஆயிரமாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் எட்க்பாஸ்டன் மைதானத்தில் மட்டும் இங்கிலாந்து அணி 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 27 வெற்றி பெற்றுள்ளது. 15 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி ஐசிசி சேர்மன் சஷாங் மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் விளையாடப்போகும் இங் கிலாந்து அணிக்கு கிரிக்கெட் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மைல்கல்லை எட்டும் முதல் அணியும் இதுதான். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக 1932ஆம் ஆண்டில் நடந்த முதல் போட்டியில் இருந்தே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மொத்தம் 117 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, 43 போட்டியில் வெற்றிகளையும் 25 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com