மொத்தம் 20 அணிகள்.. அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் இத்தனை மாற்றங்களா? - முழுவிபரம்

மொத்தம் 20 அணிகள்.. அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் இத்தனை மாற்றங்களா? - முழுவிபரம்
மொத்தம் 20 அணிகள்.. அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் இத்தனை மாற்றங்களா? - முழுவிபரம்

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 9-வது டி20 உலகக் கோப்பை தொடரில் மாற்றம் செய்யப்பட்டு, ஐசிசி எனப்படும் சர்வதேச கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இதில் 8 அணிகள் நேரடியாக குரூப் 12 சுற்றுக்கு தகுதி பெற்றநிலையில், மீதமுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் இருந்து இரண்டு அணிகள் குரூப் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. அதன்பின் குரூப் 12-ல் உள்ள அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, இரண்டு பிரிவுகளிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடித்த அணி அரையிறுதிக்கு முன்னேறின. அதன் பிறகு இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்துனை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் எவ்வாறு நடத்தப்படும் என்ற விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதுகுறித்து இங்குக் காணலாம்.

• 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

• 20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளது.

• நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட பிரிவில், ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

• ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் தலா இரண்டு அணிகள், சூப்பர் 8 குரூப்பிற்கு முன்னேறும்.

• சூப்பர் 8 குரூப்பிற்கு தகுதிப் பெற்ற 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளது.

• ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள் அதே பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

• இரண்டு பிரிவிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

• இதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெறும்.

தற்போது 12 அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. அதன்படி, 2024 டி20 கிரிக்கெட் தொடர், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளதால், அந்த அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. மேலும் 2022 உலகக் கோப்பையில் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களைப் பிடித்த நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, ஆகிய அணிகளும், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. இந்த 10 அணிகளுடன், ஐசிசி தரவரிசையில் மேலே உள்ள வங்கதேசமும், ஆஃப்கானிஸ்தானும் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. 12 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்ற நிலையில், மீதமுள்ள 8 அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி அதன் அடிப்படையில் முன்னேறி தேர்வாகும்.

இந்த 12 அணிகளை தாண்டி புதிதாக எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்பதை பொறுந்திருந்து பார்ப்போம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com