கிரிக்கெட்டுக்கு 100 கோடி ரசிகர்கள்: ஆய்வில் தகவல்!
உலகம் முழுதும் 100 கோடிக்கும் அதிகமானோர் கிரிக்கெட்டை ரசிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
டி20 கிரிக்கெட் போட்டி வந்த பிறகு டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது என்ற விவாதங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை அறிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 12 கிரிக்கெட் உறுப்புகள் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்காவில் நடந்தப்பட்ட ஆய்வில் 100 கோடிக்கும் மேல் ஆதரவு தெரிவித்துள்ளனர். 16 வயதில் இருந்து 69 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆதரவை தெரிவித்துள்ளனர். இதில் 39 சதவிகிதம் பெண் ரசிகைகள்!
இதில் 90 சதவிகித்தினர் துணைக்கண்ட ரசிகர்கள். சீனா, அமெரிக்காவில் கிரிக்கெட்டுக்கு ஆதரவு இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறும்போது, ‘நம் உறுப்பினர்களில் 75 சதவிகித த்தினர் டி20 போட்டியைதான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த அந்த போட்டியை அதிகரிக்க வேண்டும் என்றாலும் டெஸ்ட் போட்டியையும் ரசிகர்கள் விரும்புகின்றனர். அதுவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 95 சதவிகித ரசிகர் கள், ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி, டி20 உலகக் கோப்பைப் போட்டியை ரசிக்க அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்’ என்றார்.