சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி

சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சர்ச்சையான ஓவர் த்ரோ ரன்கள் குறித்து ஐசிசி தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒன்று சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆன நிலையில், அதிக பவுண்டரிகள் என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. மற்றொன்று கடைசி ஓவரில் ஓவர் த்ரோ மூலம் 6 ரன்கள் கிடைத்தது.

லாட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இந்த இறுதிப் போட்டியில் 242 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. பவுல்ட் வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தினை அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட முயன்றார். பீல்டிங் செய்த குப்தில் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் வீசினார். ஆனால், ஸ்டம்பை நோக்கி வந்த பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு, அங்கிருந்து பவுண்டரியை எல்லைக் கோட்டை சென்றடைந்தது. அதனால், ஓடி எடுத்த இரண்டு ரன்களுடன், ஓவர் த்ரோ மூலமாக 4 நான்கு ரன்கள் கூடுதலாக இங்கிலாந்து அணிக்கு கிடைத்தது. 

ஓவர் த்ரோ மூலமாக கிடைத்த அந்த 4 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. அதாவது இங்கிலாந்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது என்றே சொல்லலாம்.

அதனையடுத்து, ஓவர் த்ரோவில் 6 ரன்கள் வழங்கப்பட்டது தவறு என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரபல முன்னாள் கிரிக்கெட் நடுவர் சைமன் டபிள், அந்த ஓவர் த்ரோவிற்கு 5 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதாவது, ஐசிசி விதிகளின்படி, பீல்டர் பந்தினை எறிவதற்கு முற்பாக பேட்ஸ்மேன்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து இருக்க வேண்டும். ஆனால், அன்று பேட்ஸ்மேன்கள் கடக்கவில்லை. அதனால், அந்த ஒரு ரன் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதே பலரது விமர்சனம். அந்த ஒருவர் இருந்திருந்தால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

இந்த விவகாரம் குறித்து ஐசிசி தொடர்ச்சியாக மவுனம் காத்து வந்தது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த ஓவர் த்ரோ ரன்கள் குறித்து ஐசிசி குறித்து ஐசிசி செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “விதிகளை களத்தின் சூழலுக்கு ஏற்ப நடுவர்கள் முடிவு எடுக்கிறார்கள். அதனால், அந்த முடிவுகள் குறித்து கருத்து சொல்ல முடியாது என்பதே எங்களில் கொள்கை முடிவு” என்றார். போர்ஸ் ஸ்போர்ட்ஸ்-க்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com