டி20 கிரிக்கெட் ரேங்கிங் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி : டாப் 10 வீரர்கள் விவரம்!

டி20 கிரிக்கெட் ரேங்கிங் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி : டாப் 10 வீரர்கள் விவரம்!

டி20 கிரிக்கெட் ரேங்கிங் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி : டாப் 10 வீரர்கள் விவரம்!
Published on

டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக வென்றுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 கிரிக்கெட்டுக்கான ரேங்கிங் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10 இடத்தை பிடித்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் யார்? யார்? என்பதை பார்ப்போம்.

பேட்ஸ்மேன்களில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். டேவிட் மலான், மார்க்ரம், கான்வே, முகமது ரிஸ்வான், கே.எல்.ராகுல், ஆரோன் பின்ச், விராட் கோலி, பட்லர் மற்றும் வாண்டர் டூசன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இதில் கான்வே மூன்று இடங்கள் முந்தியுள்ளார். கே.எல்.ராகுல் ஒரு இடம் பின் தள்ளப்பட்டுள்ளார். 

பவுலர்களில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா முதலிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து ஷம்சி, ஆடம் சாம்பா, அடில் ரஷீத், ரஷீத் கான், ஹேசல்வுட், முஜீப்-உர்-ரஹ்மான், ஆன்ரிச் நோர்க்யா, டிம் சவுதி, கிறிஸ் ஜோர்டான் உள்ளனர். 

ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் முகமது நபி முதலிடத்தில் உள்ளார். ஷகிப்-அல்-ஹசன், லிவிங்ஸ்டன், மேக்ஸ்வெல், ஹசரங்கா, மக்சூத், ஸ்மித், மார்க்ரம், மொயின் அலி, மிட்செல் மார்ஷ் மாதிரிஜான் வீரர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.  

இந்திய அணி சார்பில் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் மற்றும் கோலி மட்டுமே டாப் 10 வரிசையில் உள்ளனர். பவுலிங் மற்றும் ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலில் எந்தவொரு இந்திய வீரரும் இடம் பிடிக்கவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com