ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் விராட் கோலி

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் விராட் கோலி

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் விராட் கோலி
Published on

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒருநாள் போட்டியின் அடிப்படையில் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 4 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். டாப் 10க்குள் இந்திய வீரர்கள் இருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். தோனி 12வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா 5வது இடத்திலும், அக்‌ஷர்  பட்டேல் 7வது இடத்திலும் உள்ளனர். இது அக்‌ஷரின் சிறந்த தரநிலையாகும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com