\
ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசை: 2-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட பும்ரா! முதலிடத்தில் யார்?

ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசை: 2-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட பும்ரா! முதலிடத்தில் யார்?

ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசை: 2-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட பும்ரா! முதலிடத்தில் யார்?
Published on: 

ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசை பட்டியலில், 704 புள்ளிகளுடன் ட்ரெண்ட் போல்ட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த இந்திய வீரரான பும்ரா 703 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தங்கினார். இருவருக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் வெறும் ஒன்றுதான்!

மூன்றாவது இடத்தில் ஷகீன் அஃப்ரிடியும், நான்காவது இடத்தில் ஹேசில்வுட்டும், ஐந்தாவது இடத்தில் முஜிப் உர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர். இதேபோன்று பட்டியலில் முகமது நபி ஒரு இடத்திற்கு முன்னேறி 8-வது இடத்தையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு இடம் பின்தங்கி 9-வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த வாரம் ஐ.சி.சி. வெளியிட்ட ஒரு நாள் போட்டிக்கான சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா 2 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் முதல் இடத்தை பிடித்து இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி அவர் இந்த இடத்தை அடைந்தார். ஆனால் அடுத்த ஒரு வாரத்திற்குள் போல்ட் அதிக புள்ளிகளைப் பெறவே, பும்ராவை முந்திச் சென்று மீண்டும் முதலிடத்தை பிடித்துவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com