\
ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்

ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்

ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்
Published on: 

உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட அணியை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர் நேற்று இரவு முடிவடைந்தது. பரப்பரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்த உலகக் கோப்பைக்கான அணி என்ற தலைப்பில் 12 வீரர்கள் கொண்ட பட்டியலை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

இதில், இந்தியாவின் ரோகித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர பங்களாதேஷ் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் காரே மற்றும் மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணியின் ஜெசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் உள்ளனர். அதேபோல நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் ஃபெர்குசன் ஆகியோர் உள்ளனர். இந்த அணியில் 12ஆவது வீரராக நியூசிலாந்தின் பவுல்ட் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com