டி20 உலகக்கோப்பை தொடரில் நடைமுறைக்கு வரும் 5 மாற்றங்கள்!

டி20 உலகக்கோப்பை தொடரில் நடைமுறைக்கு வரும் 5 மாற்றங்கள்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நடைமுறைக்கு வரும் 5 மாற்றங்கள்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் நடைமுறைக்கு வரும் 5 மாற்றங்களை அறிவித்துள்ளது ஐசிசி.

டி20 உலகக்கோப்பை தொடரில் நடைமுறைக்கு வரும் 5 மாற்றங்கள்:

* பேட்ஸ்மேனின் கவனத்தை குலைக்கும் வகையில் பந்து வீசும் அணியினர் செயல்பட்டாலோ, விதிமுறைகளுக்கு புறம்பான முறையில் ரன்களை தடுக்க முயன்றாலோ நடுவர்கள் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கலாம்.

* ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்தை கேட்ச் கொடுத்து அவுட் ஆனால் புதிதாக களத்திற்கு வரும் பேட்ஸ்மேன்தான் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் கிராஸ் ஓவர் செய்திருந்தாலும்கூட புதிதாக வரும் பேட்ஸ்மேன்தான் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும்.

* ஓவர்கள் வீச ஓர் அணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் மீதமுள்ள ஓவர்களில் வட்டத்துக்குள் கூடுதலாக ஒரு வீரரை நிறுத்த வேண்டும்.

* ஒரு பேட்ஸ்மேன் பந்தை ஸ்ட்ரைக் செய்து அந்த பந்தை பந்துவீச்சாளர் பிடித்து, க்ரீஸை விட்டு பேட்ஸ்மேன் வெளியே வந்துவீட்டார் என்பதற்காக ரன்அவுட் செய்யும் நோக்கில் எரிவது கூடாது. அவ்வாறு ரன்அவுட் செய்ய முயன்றாலும் அது ஏற்கப்படாது.

* பொதுவாக பவுலர்கள் பந்து வீச முற்படும்போது நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் உள்ள பேட்ஸ்மென் கிரீஸ் லைனுக்கு வெளியே சென்று ரன் ஓட தயாராக இருப்பார்கள். பவுலர்கள் அதனை கவனித்தால் அவர்கள் ரன் அவுட் செய்யலாம். ஆனால் இந்த முறை நியாயமற்றதாக பார்க்கப்பட்டது. இப்போது அது அதிகாரப்பூர்வ ரன் அவுட்டாக மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்.. டாப் 5ல் 4 இந்திய வீரர்கள்.. முதலிடம் யார் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com