டி20 உலகக்கோப்பை: குயின்டன் டி காக்-ன் அதிரடி வீண்... தென்னாப்பிரிக்காவுக்கு நேர்ந்த சோகம்

டி20 உலகக்கோப்பை: குயின்டன் டி காக்-ன் அதிரடி வீண்... தென்னாப்பிரிக்காவுக்கு நேர்ந்த சோகம்
டி20 உலகக்கோப்பை: குயின்டன் டி காக்-ன் அதிரடி வீண்... தென்னாப்பிரிக்காவுக்கு நேர்ந்த சோகம்

வெற்றியின் விளிம்பு வரை சென்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் நேற்று ஹோபர்ட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி தொடங்க தாமதம் ஆனது. பின்னர் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக மாதேவேரே 18 பந்துகளில் 35 ரன்களும், மில்டன் ஷும்பா 18 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் லுங்கி என்கிடி 2 விக்கெட்டுகளும், பார்னெல், நார்ட்ஜே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 9 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்க அணி. ஆனால், மழை மீண்டும் குறுக்கிட்டதால் தென் ஆப்பிரிக்க அணி 7 ஓவர்களில் 64 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து இடையூறு செய்ததால் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

18 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழாக்காமல் இருந்த குயின்டன் டி காக்கின் அதிரடி ஆட்டம் வீணாகப் போனது. தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 24 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இன்னும் ஒரு ஓவர் வீசப்பட்டிருந்தால்கூட குயின்டன் வெற்றி பெற செய்திருப்பார். ஆனால் வெற்றியின் விளிம்பு வரை சென்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. மழையால் போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறவிருக்கும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இதையும் படிக்கலாமே: ’இது அதுல’- ரிவைண்ட் செய்ய வைக்கும் சுவாரசியங்கள்.! 2007 -2022 இந்திய அணி ஒரு பார்வை.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com