டி20 உலகக் கோப்பை: 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை... வெல்லுமா ஆஸ்திரேலியா?

டி20 உலகக் கோப்பை: 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை... வெல்லுமா ஆஸ்திரேலியா?

டி20 உலகக் கோப்பை: 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை... வெல்லுமா ஆஸ்திரேலியா?
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்துள்ளது.  

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 'சூப்பர் 12' சுற்றில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் பெர்த் ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பத்தும் நிசங்க 45 பந்துகளில் 40 ரன்களும், சரித் அசலங்கா 25 பந்துகளில் 38 ரன்களும், தனஞ்சய டி சில்வா 23 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி ஆடிவருகிறது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com