இனி டி20 போட்டிகளின் "சூப்பர் ஓவர்"-க்கு புது ரூல்ஸ் !

இனி டி20 போட்டிகளின் "சூப்பர் ஓவர்"-க்கு புது ரூல்ஸ் !

இனி டி20 போட்டிகளின் "சூப்பர் ஓவர்"-க்கு புது ரூல்ஸ் !
Published on

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவரில் கடைபிடிக்கப்படும் புதிய விதிமுறையை ஐசிசி அண்மையில் வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்தில் அண்மையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. அந்த தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. ஆனால், இந்தத் தொடரில் இரண்டு போட்டிகள் சமனில் முடிந்து சூப்பர் ஓவர் வரை சென்றது. மேலும், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், ஐசிசி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. ஆகவே தற்போது விதிமுறைகளை மாற்றியுள்ளது. டி20-க்கும் மாற்றியுள்ளது. டி20-க்கான புதிய விதிமுறை தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் விளையாடப்படும். சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனால், தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் விளையாடப்படும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும். இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும். ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு ‘ரிவ்யூ’ வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும் சூப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும். போட்டியில் 2-வது பேட்டிங் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்யும். முதலில் பீல்டிங் செய்யும் அணி பந்தை தேர்வு செய்யலாம். 2-வது பீல்டிங் செய்யும் அணி அதே பந்தை தேர்வு செய்யலாம். பந்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், போட்டி நடைபெறும் சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பீல்டர்கள் கட்டுப்பாடு போட்டியின் கடைசி ஓவரில் எப்படி இருந்ததோ, அதே போன்று இருக்கும். சூப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது ஐசிசி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com