மேட்ச் பிக்சிங்: அமீரக வீரர்கள் 2 பேர் எட்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை

மேட்ச் பிக்சிங்: அமீரக வீரர்கள் 2 பேர் எட்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை
மேட்ச் பிக்சிங்: அமீரக வீரர்கள் 2 பேர் எட்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட அமீரக கிரக்கெட் வீரர்கள் இருவருக்கு, எட்டு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. ஐக்கிய அமீரக அணியின் வீரர்கள் முகமது நவீத் மற்றும் ஷைமான் அன்வர் ஆகிய இருவரும் இந்த தடைக்கு ஆளாகியுள்ளனர். 

அமீரகத்தில் 2019 வாக்கில் நடைபெற்ற டி20  உலகக்கோப்பை குவாலிபையர் போட்டியின்போது அவர்கள் இருவரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றுள்ளனர். அது குற்றச்சாட்டக அப்போது வெடித்தது. தொடர்ந்து அவர்களது குற்றம் நிரூபிக்கபட்ட காரணத்தினால் தற்போது தடைக்கு ஆளாகியுள்ளனர். 

முகமது நவீத் அமீரக அணியின் முன்னாள் கேப்டன். தன் நாட்டுக்காக 39 ஒருநாள் மற்றும் 31, டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். மற்றொரு வீரர் அன்வர் பேட்ஸ்மேன் ஆவார். 

தவறான பாதையில் போகும் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த தடை நடவடிக்கை தக்கதொரு பாடாமக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் ஐசிசியின் அலெக்ஸ் மார்ஷல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com