‘இந்த சீசனில் அஷ்வினை மன்கட் செய்ய விடமாட்டேன்’- ரிக்கி பாண்டிங்
2020 ஐ.பி.எல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின்.
அடுத்த சில நாட்களில் ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாக உள்ள ஐ.பி.எல் தொடரில் அஷ்வின் மன்கட் முறையில் பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.
கடந்த 2019 ஐ.பி.எல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்-ஸ்ட்ரைக்கராக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பட்லரை அஷ்வின் ‘மன்கட்’ முறையில் பந்து வீசுவதற்கு முன்பே அவுட் செய்திருந்தார். அந்த அவுட் கிரிக்கெட் உலகில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
‘அது கிரிக்கெட்டின் கேம் ஸ்பிரிட்டை குலைக்கிறது. அதனால் அஷ்வினிடம் இது குறித்து சொல்வேன்’ என பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் பாண்டிங்.