“கண்களை துடைத்து உற்று பார்த்தேன்” - இந்திய அணியை கலாய்த்த ஷோயப் அக்தர்

“கண்களை துடைத்து உற்று பார்த்தேன்” - இந்திய அணியை கலாய்த்த ஷோயப் அக்தர்

“கண்களை துடைத்து உற்று பார்த்தேன்” - இந்திய அணியை கலாய்த்த ஷோயப் அக்தர்
Published on

இந்திய அணியின் பேட்டிங்கை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கலாய்த்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங்கை கலாய்த்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர். 

“நேற்று காலை தூங்கி எழுந்தவுடன் டிவியை ஆன் செய்தேன். இரண்டாம் நாள் ஆட்டத்தை நான் பார்க்கவில்லை. ஸ்கோர் போர்டை பார்த்தவுடன் இந்தியா 369 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது என நினைத்தேன். அதனால் எனது கண்களை துடைத்துக் கொண்டு ஸ்கோர் போர்டை உற்று பார்த்தேன். அதில் 36க்கு பக்கத்தில் ‘/’ குறி இருப்பதை கவனித்தேன். 9 பேட்ஸ்மேன்கள் அவுட்,  ஒருவர் ரிட்டயர்ட் ஹர்ட் என தெரிந்து கொண்டேன். நிச்சயம் இந்த தோல்வி தர்மசங்கடமான ஒன்று. ஒட்டுமொத்த பேட்டிங் டீமின் தோல்வி. இந்தியாவோடு ஒப்பிடும்போது பாகிஸ்தானே மேல் தான் என தோன்றுகிறது” என அக்தர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2013-இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 49 ரன்களை குவித்ததே அந்த அணியின் குறைந்தபட்ச ரன்னாகும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com