\
ஏமாற்றுவதற்கு பதிலாக நான் இறந்துவிடுவேன்: முகமது ஷமி

ஏமாற்றுவதற்கு பதிலாக நான் இறந்துவிடுவேன்: முகமது ஷமி

ஏமாற்றுவதற்கு பதிலாக நான் இறந்துவிடுவேன்: முகமது ஷமி
Published on

என் நாட்டை ஏமாற்றுவதற்கு பதிலாக நான் இறந்துவிடுவேன் என இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த சில நாட்களாக இவர் குறித்து மனைவி ஹசான் ஜஹான் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஹசான் ஜஹான், எனக்கு உண்மையாக இல்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை. பாகிஸ்தானை சேர்ந்த அலிஷாப் என்ற பெண்ணிடம் பணம் வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் முகமது பாயின் வலியுறுத்தலின் பேரில் அதைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றார்.

மனைவியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஷமி, “ நான் நாட்டிற்காக விளையாடுகிறேன், எனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சிறப்பாகவே செயல்படுகிறேன்.100 சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடி வருகிறேன்.என் நாட்டை ஏமாற்றுவதற்கு பதிலாக நான் இறந்துவிடுவேன்” என உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com