“கிரிக்கெட்டின் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் தோனி” - பிருத்வி ஷா

“கிரிக்கெட்டின் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் தோனி” - பிருத்வி ஷா
“கிரிக்கெட்டின் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் தோனி” - பிருத்வி ஷா

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பிளே-ஆஃப் போட்டியில் டெல்லியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து தனது எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பிருத்வி ஷா.

“இப்போதைக்கு அணியில் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருகிறோம். எங்களது செயல்பாட்டுக்கு ஒட்டுமொத்த அணியும் பொறுப்பேற்றுக் கொள்கிறது. அது வெற்றியானாலும் சரி, தோல்வியானாலும் சரி. அடுத்த போட்டியில் வலுவாக கம்பேக் கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தோல்வியை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இருந்தாலும் இறுதி போட்டிக்குள் நுழைய எங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த நம்பிக்கையில் நாங்கள் இப்போது உள்ளோம். 

கிரிக்கெட் விளையாட்டின் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் சென்னை அணியின் கேப்டன் தோனி. பலமுறை தனது அபாரமான பேட்டிங் திறன் மூலம் அணிக்கு தேவைப்படும் வெற்றியை இறுதிவரை களத்தில் நின்று முடித்துக் கொடுத்துள்ளார். தோனியை ஒரு தலைவராகவும், பேட்ஸ்மேனாகவும் பக்கத்தில் இருந்து பார்த்தது எனது அதிர்ஷ்டம் என நான் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார் பிருத்வி ஷா. 

சென்னைக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தார் பிருத்வி ஷா. இருப்பினும் டெல்லி அணி நிர்ணயித்த 172 ரன்களை விரட்டிய சென்னைக்கு தொடக்கத்தில் கெய்க்வாட், உத்தப்பா அரைசதம் விளாசி அடித்தளம் அமைக்க இறுதியில் வெறும் 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி தோனி வெற்றியை உறுதி செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com