"தோனிக்கு முன்பு நான் கேப்டனாவேன் என எதிர்பார்த்தேன்" - மனம் திறந்த யுவராஜ் சிங்

"தோனிக்கு முன்பு நான் கேப்டனாவேன் என எதிர்பார்த்தேன்" - மனம் திறந்த யுவராஜ் சிங்
"தோனிக்கு முன்பு நான் கேப்டனாவேன் என எதிர்பார்த்தேன்" - மனம் திறந்த யுவராஜ் சிங்

2007 டி20 உலகக் கோப்பையின்போது இந்திய அணிக்கு என்னை கேப்டனாக்குவார்கள் என எதிர்பார்த்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.

22 Yarns podcast என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள யுவராஜ் சிங் "அப்போதுதான் 2007ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருந்தோம். அப்போது இந்திய கிரிக்கெட் மிகவும் மோசமான சூழலில் இருந்தது. அது நிறைய குழப்பங்கள் இருந்த காலக்கட்டம். அதன் பிறகு 2 மாதகால இங்கிலாந்து பயணம். இடையே தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்துக்கு ஒரு மாதகால பயணம். இதோடு தொடக்க டி20 உலகக்கோப்பையும் நடைபெற இருந்தது. அதாவது தொடர்ச்சியாக 4 மாதங்கள் இந்தியாவிலிருந்து வெளியே இருக்க வேண்டும். எனவே அப்போது மூத்த வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள நினைத்தார்கள். டி20 உலகக்கோப்பைத் தொடரை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்றார்.

மேலும் பேசிய அவர் "அப்போது டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இருக்கும் இந்திய அணிக்கு நான் கேப்டனாக அறிவிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் அப்போது தோனியின் பெயர் அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் என்பதெல்லாம் கவலையில்லை, யாராக இருந்தாலும் 100% ஆதரவு கொடுப்பேன். அது ராகுல் டிராவிடாக இருந்தாலும் கங்குலியாக இருந்தாலும் சரி, அணிக்கான வீரராக இருக்கவே விரும்புவேன். அதையே நான் ஓய்வுப்பெறும் வரை செய்தேன்" என்றார் யுவராஜ் சிங்.

தொடர்ந்து பேசிய யுவராஜ் சிங் "2007 உலகக் கோப்பையின் போது நாங்கள் ஒரு இளம் அணி. பன்னாட்டு பயிற்சியாளர் இல்லை, பெரிய பெயர்களும் இல்லை. லால்சந்த் ராஜ்புட் எங்கள் பயிற்சியாளர். வெங்கடேஷ் பிரசாத் பவுலிங் பயிற்சியாளர் என்று நினைக்கிறேன். இளம் கேப்டனின் கீழ் இளம் அணியாக இருந்தோம். யாருக்கும் எதுவும் தெரியவில்லை, டி20 கிரிக்கெட் உத்திப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. எனவே எங்களுக்கு தெரிந்த பாணியில் ஆட முடிவெடுத்தோம். அதுவும் கைகொடுத்தது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com